செவ்வாய், மார்ச் 07, 2017

போவதும் வருவதும் புதுசா என்ன ??

எங்கடா ரொம்ப நாளா ஆளைக் காணோமேன்னு நினைச்சிருப்பீங்க... அதுவும் நல்லதுக்கு தான்னு சந்தோஷமும் பட்டிருப்பீங்க...

இந்த. வாரம் உங்க ராசிக்கு காணாமல் போன பொருள் கிடைக்கிற காலம் ! அதான் வந்துட்டேன்ல...

இனிமே கச்சேரி தான்!

பார்த்து ஆறுமாதம் இருக்குமா?

இந்த விடுபட்ட காலத்தில் பல பயணங்கள் . சுற்றத்தில் ஓரிரு மரணங்கள்... சுற்றத்திலும் நட்பிலும் சில திருமணங்கள்.

படித்ததெல்லாம் பெரும்பாலும் ஆன்மீகம்.

ஒரு சேமிப்புக் கணக்கை முடிக்கச் சொல்லி வங்கிக்கு எழுதிய கடிதமொன்றைத் தவிர வேறேதும் எழுதவில்லை.

பிளாகோ, முகநூலோ பார்க்கவில்லை. அவ்வப்போது பார்த்துவந்த 'தெய்வ மகள்' தொடர்ர்ர்ர்ரையும் விட்டு விட்டேன். அவ்வப்போது 'வாட்ஸ் அப்' வல்லடிகள் மட்டும் தான் காலட்சேபம்.

நாட்டிலே நடக்க வேண்டியவை நடக்காமலும், நடக்கக் கூடாதவை நடந்தும் பதைபதைக்க வைத்திருக்கிறது..... கொடுங்காலம்... இதற்கிடையே,மக்களின் பிரஞ்ஞை பூர்வமான விழிப்பின் வெளிப்பாடு ஒரு வியப்பான ஆறுதல்.

என் சிறுகதை தொகுப்பொன்று 'காமச்சேறு' எனும் தலைப்பில் வர இருக்கிறது.

அபிராமி அந்தாதி'யை விளக்கத்துடன் முகநூலில் சில பாடல்கள் வரை பதிவிட்டிருந்தேன். அவற்றை வலைப்பூவிலும் பதிவிட்டு, தொடர உத்தேசம்.

வானவில்லுக்கு நீங்கள் மீண்டும் வந்து ஊக்குவிக்க வேணுமாய் விக்ஞாபித்து, யாவருக்கும் எம்பெருமான் முருகன் அருள வேணுமென அடியேன் பிரார்த்தனை செய்யுங்கால், அவ்வாறேயாகுக என்று கேட்ட அசரீரி வாக்கையுஞ் சொல்லி, தெண்டனிட்டு அமைகிறேன்.

மீண்டும் சந்திப்போமா?  நமஸ்காரம்

19 comments:

V Mawley சொன்னது…



ததாஸ்து ...

மாலி

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

// பிளாகோ, முகநூலோ பார்க்கவில்லை. // ஆகா...! திவ்ய காலம்...!

எங்களுக்கு இனி வசந்த காலம்...!

நிலாமகள் சொன்னது…

ஆஹா... வரணும் வரணும்!

//வந்துட்டேன்னு சொல்லு; திரும்பவும் வந்துட்டேன்னு சொல்லு// :)))

எவ்வளவு இடைவேளை விட்டாலும் பத்திருபது வரியில் இட்டு நிரப்பும் திறன் அபாரம்!

//எங்களுக்கு இனி வசந்த காலம்...!// ஆமாயில்ல...!

Geetha Sambasivam சொன்னது…

மின்னணு சாதனங்களின் தொடர்பே இல்லாமல் காலம் கழிக்கலாம் என்பது உண்மை தான்! :) "தெய்வமகள்" பார்க்கலைனா ஒண்ணும் தப்பில்லை. :))))))

மோகன்ஜி சொன்னது…

வந்தனம் ஜி!

மோகன்ஜி சொன்னது…

நன்றி டிடி!! நலம் தானே?

மோகன்ஜி சொன்னது…

நிலா! நல்லா இருக்கீங்களா? நான் தான் ஒரிஜனல் கபாலிங்க! அப்பப்போ எம்.என்.நம்பியார் என்னிய கூப்பிடுவாரு!

மோகன்ஜி சொன்னது…

அக்கா! உண்மைதான் ... தெய்வமகள் நெடுந்தொடரா தினத்தந்தியில் கன்னித்தீவை மிஞ்சிடும் போல இருக்கே!!

கோமதி அரசு சொன்னது…

எங்களுக்கும் முருகன் அருள் பெற்று தந்த உங்கள் அன்புக்கு நன்றி.
உங்கள் சிறுகதை தொகுப்புக்கு வாழ்த்துக்கள்.
அபிராமி அந்தாதியை வலைப்பூவில் பதிவிட போவது மகிழ்ச்சி.

G.M Balasubramaniam சொன்னது…

ஒரு வேளை பெங்களூர் வரும் பயண திட்டத்தில் மும்முரமாய் இருந்தீர்களோ என்று நினைத்ததுண்டு/ நல்ல வேளை நான் அந்த டி ஷர்ட் இன்னும் வாங்கவில்லை சைசும் தெரியாதது ஒரு காரணம் மீள் வருகை சிறக்கட்டும்

ஜீவி சொன்னது…

//அவ்வப்போது பார்த்துவந்த 'தெய்வ மகள்' தொடர்ர்ர்ர்ரையும் விட்டு விட்டேன். ..

நான் தொடர்ந்து பார்த்து வருகிறேன். நீங்கள் விட்ட இடத்திலிருந்து தொடர்து கதை சொல்லத் தயார். ஜவ்வு போல இழுத்தாலும் அந்த இழுப்பிலும் ஒரு சுகம் இருக்கத் தான் செய்கிறது.

//என் சிறுகதை தொகுப்பொன்று 'காமச்சேறு' எனும் தலைப்பில் வர இருக்கிறது.

காமம் சேறல்ல; சோறு!

மோகன்ஜி சொன்னது…

நன்றி மேடம்... தொடர்வேன்

மோகன்ஜி சொன்னது…

GMB சார்! ஏனோ பெங்களூர் பக்கம் வரவே இயலவில்லை. வரும் போது முதல் விசிட் உங்க வீட்டுக்குத் தான். டீ சர்ட் வேண்டாம்.. டீ போதுமே! கூடவே உங்கள் ஆசீரவாதமும்...

மோகன்ஜி சொன்னது…

ஜீவி சார் ! சுகமா !
முன்பு பணியில் இருந்த போது எட்டுமணி வாகில் வீட்டுக்கு வருவேன். என் வரவேற்பரையில் தெய்வமகள் ஓடிக் கொண்டிருக்கும். அப்படி இப்படி பார்த்துக் கொண்டிருந்தேன்.

இப்போது என் நேரத்தைக் கவர்ந்து வீணாக்கும் செயல் யாவையுமே நீக்கி வருகிறேன். மிச்சம் இருக்கும் நேரம் கொஞ்சம். செய்ய வேண்டியதோ அதிகம்.

//காமம் சேறல்ல, சோறு:/
ஓ... அது வெந்து இளகுவதாலா? இல்லை, வேக வைப்பதாலா??

ஸ்ரீராம். சொன்னது…

வருக.வருக.... சுவைமிகு பதிவுகள் தருக! எங்கள் பதிவுகளுக்கும் உங்கள் ஆதரவைத் தருக தருக!

மோகன்ஜி சொன்னது…

நலமா ஶ்ரீராம்? வரவேற்புக்கு நன்றி ! அவசியம் எங்கள் பிளாகிற்கு இனி வருவேன்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும்...
இனி தொடர்ந்து எழுதுங்க...
நலமா அண்ணா?

மோகன்ஜி சொன்னது…

கண்டிப்பாக எழுதுவேன் குமார்

நிலாமகள் சொன்னது…

நலம் தான் ஜி... உங்க புண்ணியத்துல.// நான் தான் ஒரிஜனல் கபாலிங்க!// சந்தோசம்:))

//மிச்சம் இருக்கும் நேரம் கொஞ்சம். செய்ய வேண்டியதோ அதிகம். // இதில் எல்லோருக்குமா ஏதோ செய்தி இருக்கு போலிருக்கே... நம்ம வேலை 'ஆக்ட்' குடுக்கறது மட்டும் தான் அண்ணாத்தே... மிச்சத்தை 'அவன்' பாத்துப்பான். உங்களை பார்த்து நாங்களாம் தைரியமா இருக்கறாப்ல 'ஆக்ட்' உட்டுனு கிறோம்... நீங்க என்னடான்னா...